தை 1-ம் தேதி சபரிமலையில் ஐயப்பன் மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த டிசம்பர் 30-ம் தேதி மாலை சபரிமலை நடை திறக்கப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான மகர ஜோதி நாளன்று ஸ்ரீஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பம்பையில் இருந்து சந்நிதானத்துக்கு கொண்டு வரப்படும்.