சவுதி அரேபியாவில் அடுத்த சீர்திருத்த நடவடிக்கையாக பெண்கள் கால்பந்து போட்டியை மைதானத்தில் நேரில் கண்டுகளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜித்தா நகரிலுள்ள கால்பந்து மைதானம் முதன்முதலாக இந்த அனுமதியை அளித்திருக்கிறது. இந்த மைதானத்தில் நடைபெற்ற உள்ளூர் அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியை பெண்களும் கண்டு ரசித்தனர்.