நபிகள் நாயகத்தையும் அவரது குடும்பத்தையும் அவமரியாதை செய்யும் வகையில் கருத்துத் தெரிவித்த ஹெச்.ராஜாவைக் கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை கிழக்கு மாவட்டம் சார்பாக மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.