தைத்திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு தலைவர்கள் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில், ’அனைவருக்கும் பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள். இனி விதைப்பது நற்பயிராகட்டும். வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர். வாழிய பாரத மணித்திருநாடு’ என தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.