சவுதி அரேபியாவில் பெண்களுக்கென்று கடுமையான கட்டுபாடுகள் உண்டு. தற்போது இளவரசராக பெறுப்பேற்ற முகமது பின் சல்மான், அங்கு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பெண்கள் மைதானத்துக்கு சென்று போட்டியை காணவும் அனுமதி வழங்கப்பட்டது. இதனை அடுத்து நேற்று சவுதியில் நடந்த கால்பந்து போட்டியை பெண்கள் நேரடியாக கண்டுகளித்தனர்.