குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள நாடான்குளத்தில் செயல்படும் டாஸ்மாக் கடையில் அதிகாலையில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து திருட முயற்சித்துள்ளனர். போலீஸ் ரோந்து வாகனத்தைக் கண்டதும் ஓடிவிட்டதால் திருட்டு தவிர்க்கப்பட்டது. இதே கடையில் ஏற்கெனவே இரு முறை கொள்ளை நடந்துள்ளது. அதனால் டாஸ்மாக் ஊழியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.