சேலத்தில் விழா ஒன்றில் பேசிய முதல்வர் பழனிசாமி ’சேலத்தில் விமான நிலையத்திற்கு இணையாக அனைத்து வசதிகள் கொண்ட அதி நவீன பஸ்போர்ட் அமைக்க, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அனுமதி அளித்துள்ளார். சேலம், மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களில் இந்த அதிநவீன பேருந்து நிலையங்கள் மிக விரைவில் செயல்படுத்தப்படும்’ என்றார்.