கடலூர் மாவட்டம், சிதம்பரம் பஸ்நிலையம் டாஸ்மாக் கடையின் பின்புறம் உள்ள மரத்தடியில் பிறந்து சில மணிநேரமே ஆன பெண் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதனை கைப்பற்றிய சிதம்பரம் போலீசார் குழந்தை இறந்து பிறந்ததால் தூக்கி வீசப்பட்டதா அல்லது பெண் குழந்தையாக பிறந்ததால் தூக்கி எறியப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர்.