சென்னையில் சாலையோரக் கடைகள் வைக்க ஆதார் அட்டையைக் கட்டாயமாக்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே கடைகளுக்கான அனுமதி பெற்றவர்கள் மீண்டும் முறைகேடாக அனுமதி பெறுவதைத் தடுக்கும்வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெட்டிக்கடைகளில் புகையிலைப் பொருட்களுக்கு அனுமதி கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.