தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் பெத்தநாயக்கன் பாளையம் இளங்கோவன். இவர் முதல்வர் பழனிசாமிக்கு நெருக்கமானவர். வரும் 23-ம் தேதி வருமான வரித்துறையில் ஆஜராக இவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது சேலம் அ.தி.மு.க வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.