ஐ.பி.எல் ஏலம் வருகிற 27, 28-ம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் 1,122 வீரர்கள் பங்கேற்கிறார்கள். ஏலத்திற்கு வரும் வீரர்கள் பட்டியல் 8 அணிகளின் நிர்வாகத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது. யுவராஜ், கம்பீர், ஹர்பஜன் சிங் போன்ற இந்தியாவைச் சேர்ந்த முக்கிய வீரர்கள் ஏலத்திற்கு வருகிறார்கள்.