செஞ்சூரியன் டெஸ்டில் இந்திய அணியின் தேர்வு குறித்து சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறுகையில், ‘முதல் டெஸ்டில் சிறப்பாகச் செயல்பட்ட புவனேஷ்வர் குமாரைத் தேர்வு செய்யாதது அதிர்ச்சி அளிக்கிறது. அதேபோல், ஒரே ஒரு இன்னிங்ஸில் மோசமாக விளையாடியதற்காக ஷிகர் தவான் பலிகடாவாக ஆக்கப்பட்டிருக்கிறார்’ என்றார்.