ஆனந்த விகடன் சினிமா விருதுகள் நிகழ்ச்சியில், 2017-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகராக விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கான விருதை கமல்ஹாசன் வழங்கினார். விஜய்க்கு விருதை வழங்கிய பின்னர் கமல்ஹாசன், `இது வெறும் ஆரம்பம்தான் தம்பி விஜய். நீங்கள் நிறைய விருதுகளை வாங்குவீர்கள்' என்று புகழாரம் சூட்டியுள்ளார்.