கேரளாவின் மிக முக்கிய வழிபாட்டுத்தலம் சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் சந்நிதானம். இந்த ஆலயத்தில், மண்டல பூஜையும் மகர ஜோதி விழாவும் சிறப்பானது. மகர ஜோதி விழா நிறைவு பெற்றதையொட்டி நேற்றுவரை சந்நிதானம் திறந்திருந்தது. அரச குடும்பத்தினரின் வழிபாட்டுக்குப் பிறகு, காலை 7 மணிக்கு சபரிமலை சந்நிதானக் கோயில் நடை அடைக்கப்படும்.