தென் பழனி என அழைக்கப்படும், குடவரைக் கோயிலான தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கொடி மரத்துக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. முக்கிய விழாவான தேர்த் திருவிழா வரும்  31-ம் தேதி நடைபெறுகிறது.