வரும் 24-ம் தேதி ரத சப்தமி விழா நாள் வருகிறது. சூரிய பகவானை ஆராதிக்கும் இந்தத் திருநாளில் நாராயணனும் கொண்டாடப்படுகிறார். திருமலை திருப்பதியில் இந்த நாளில் ஒரு நாள் பிரமோற்சவ விழா நடத்தப்படுகிறது. ஜனவரி 24 அன்று நடைபெறும் ஒருநாள் ரத சப்தமி பிரமோற்சவத்தில் ஸ்ரீவேங்கடாசலபதி விதவிதமான அலங்காரங்களில் வீதி உலா வருவார்.