சுவாமி விவேகானந்தரின் முதன்மை சீடரான சகோதரி நிவேதிதையின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரின் புகழை தமிழகம் முழுவதும் பரப்பும் வகையில் ரத யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது. கோவை இந்துஸ்தான்  கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நடிகர் விவேக் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.