தஞ்சாவூரிலுள்ள பிரசித்திபெற்ற ஜம்புகேஸ்வரர் கோயிலின் மெயின் நுழைவுவாயிலுக்கு மேலே ராட்சத தேன்கூடு உள்ளது. அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க, இதை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் அறநிலையத்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாகப் புகார் கூறுகிறார்கள்.