புதுக்கோட்டை இலுப்பூர் அருகே உள்ளது மகுதுப்பட்டி எனும் கிராமம். இங்குள்ள தூயவனத்து அந்தோணியார் ஆலய தேர்த் திருவிழா 3 நாள்கள் நடைபெறும். இதில் ஜாதி, மத பேதமின்றி சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் கூடுவார்கள். இந்த வருடத்தின் தேர்பவனித் திருவிழா, இந்திய குடியரசு தினமான நேற்று இரவு 8 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.