திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சுவாமி சண்முகப்பெருமானைக் கடலில் கண்டெடுத்த 363-ம் ஆண்டை முன்னிட்டு சண்முகருக்கு சிறப்பு அபிசேகம் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து,   உற்சவர், சுவாமி அலைவாய் உகந்தப் பெருமாள் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் வீதி உலா வந்தது.