திருச்செந்தூரில் தைப்பூச பவனி தைப்பூசத்தை முன்னிட்டு பல மாவட்டங்களில் இருந்து பாதயாத்திரையாக வந்த முருக பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர். சுவாமி அலைவாய் உகந்த பெருமாள், சப்பரத்தில் எழுந்தருளி ரத வீதிகள் வழியாக பவனி வந்தார். அங்கு தைப்பூச மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம், விசேஷ தீபாராதனை நடைபெற்றது.