தூத்துக்குடி, அருள்மிகு சங்கர ராமேஸ்வரர் உடனுறை பாகம்பிரியாள் திருக்கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு திருக்கோவில் தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் சுவாமி - அம்பாள் எழுந்தருளி 11 முறை தெப்பக் குளத்தை வலம் வந்தனர். 'சிவ சிவ.., ஹர ஹரா..' கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.