2018-19 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்கிறார். இந்தநிலையில், பட்ஜெட் குறித்த பொதுமக்களின் சந்தேகங்களுக்கு ட்விட்டரில் நிதியமைச்சர் இன்று இரவு 7 மணி முதல் பதிலளிக்கிறார். #AskYourFM என்ற ஹேஷ்டேக்கில் கேள்விகளைக் கேட்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.