2018-19 -ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறுகையில், ‘வரி ஏய்ப்போரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. புதிதாக பலர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். நேர்மையாக வரி செலுத்துவோருக்கு விருதும் பரிசும் வழங்கப்படும்’ என தெரிவித்தார்