ஃப்ளிப்கார்டில் ஆசை ஆசையாக ஐபோன் ஆர்டர் செய்த மும்பை இளைஞருக்கு சலவை சோப்பு வந்து சேர்ந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நாக்ராலி, பைகுல்லா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸார் டெலிவரி செய்தவர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.