இன்று இலங்கையின் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இலங்கையின் தமிழ் மக்களின் சுதந்திரம் பூரணமாக இல்லை என்பதை சுட்டிக்காட்டி, இன்று நடைபெறும் சுதந்திர தினத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு புறக்கணிக்கும் என்று இலங்கையின் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தன் அறிவித்துள்ளார்.