ரத்தச்சோகை ஏற்படாமல் தடுக்க ஆரோக்கியமான உணவுகள், பச்சைக் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகமாகச் சாப்பிட வேண்டும். உலர் திராட்சை, முந்திரி, பாதாம், பேரீச்சை, நெல்லிக்காய், கேரட் போன்றவையும் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க உதவும்.  தினசரி ஒரு வகைப் பழம் என்கிற கணக்கில் பழமாகச் சாப்பிடலாம்!