மார்ச் 1-ம் தேதி முதல் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். இதனால் தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பு மற்றும் புதுப்படங்கள் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திரைப்படங்களை வெளியிடும் நிறுவனங்களுக்கு எதிராகத் தயாரிப்பாளர்கள் இந்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.