இயக்குனர் ராஜுமுருகன் தன் அடுத்தப் படத்தைத் துவங்கியுள்ளார். படத்தின் பெயர்  'ஜிப்ஸி'. கதாநாயகனாக ஜீவா நடிக்கிறார். ஒலிம்பியா மூவீஸ் எஸ்.அம்பேத்குமார் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ராஜுமுருகன் ஆனந்த விகடனில் 'ஜிப்ஸி' என்ற தொடரை முன்பு எழுதியிருந்தார். அதையே தன் படத்துக்கு தலைப்பாக வைத்திருக்கிறார்.