காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள மகாராஜா ஹரி சிங் மருத்துவமனையில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி பாகிஸ்தானைச் சேர்ந்த சக பயங்கரவாதி நவீத்-ஐ தப்பிக்கவிட்டனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துப்பாக்கிச்சூட்டில், ஒரு காவலர் கவலைக்கிடமாக உள்ளார். 2 காவலர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.