வியட்நாம் கடல் பகுதியில் நச்சுக் கழிவுகளைக் கொட்டிய தைவான் நிறுவனத்துக்கு எதிராக மீனவர்கள் பேரணியாகச் சென்றதை சூழலியர் ஆர்வலர் ஹோங்க் டக் பின்ஹ் (Hoang Duc Binh) என்பவர் ஃபேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பினார். இதையடுத்து, அரசுக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி அவருக்கு 14 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.