இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் ரிலீஸுக்குத் தயாராகிவரும் படம் சவரக்கத்தி. இயக்குநர் ராம், பூர்ணா, மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம் வரும் வெள்ளி (பிப்ரவரி 9) அன்று திரைக்கு வருகிறது.