மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. களமிறங்கிய இந்திய அணியில், அதிரடியாக ஆடிய கோலி ஆட்டமிழக்காமல் 160 ரன்கள் எடுத்தார். அதிரடியாக ஆடிய தவான் 76 ரன்கள் குவித்தார். ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் குவித்தது.