தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 303 ரன்களைக் குவித்தது. கேப்டன் கோலி 160 ரன்கள் அடித்தார். அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்தது. 40 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் மட்டுமே எடுத்தது.