தெ.ஆ., அணிக்கு எதிரான போட்டியில் கோலி 160 ரன்கள் விளாசினார். இது அவருக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் 34 -வது சதம். தெ.ஆ., மண்ணில் இந்தியர் ஒருவரின் அதிகபட்ச ரன் என்ற சச்சினின் சாதனையையும் முறியடித்தார். முன்னதாக சச்சின் 2003 -இல் நமீபியா அணிக்கு எதிராக 152 ரன்கள் எடுத்தார். சச்சினுக்கும் அது 34 -வது சதம் என்பது ஆச்சர்யம்.