திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயிலான வெயிலுகந்த அம்மன் கோவிலில் இன்று காலை மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடிமரத்திற்கு சிறப்பு அபிசேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. 10 -ம் திருநாளன்று தேரோட்டம் நடைபெறுகிறது. 10 நாட்களும் அம்பாள் பல வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும்.