வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு மோசடி வழக்கில் 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வங்கதேச தேசியக் கட்சித் தலைவரான அவரால் அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாது. தீர்ப்பு வழங்கப்பட்டதும் டாக்காவில் நீதிமன்றத்துக்கு வெளியே திரண்டிருந்த வங்கதேச தேசியக் கட்சித் தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.