அல்சர், உயர் ரத்த அழுத்தம், ஆரம்பநிலை மதுமோகம் எனப் பித்த நோய்ப் பட்டியல் மிக நீளம். பித்தம் குறைக்க உணவில் காரம், எண்ணெயைக் குறைக்க வேண்டும். கோழிக்கறி கூடாது. அதிக கோதுமையும் பித்தம் கூட்டும். கைக்குத்தல் அரிசி சாதம் நல்லது. கரிசலாங்கண்ணிக்கீரை, கறிவேப்பிலை, சீரகம், எலுமிச்சை, மஞ்சள், இஞ்சி ஆகியவை பித்தத்தைத் தணிக்கும்.