தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் ஒரு நாள் தொடரில் இந்தியா முதல் 3 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. 3 போட்டிகளில் காயம் காரணமாகத் தென்னாப்பிரிக்க அணியின் அதிரடி வீரர் டி வில்லியர்ஸ் விளையாடவில்லை. தற்போது அவர், மீதமுள்ள 3 போட்டிகளில் விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தென்னாப்பிரிக்கா அணி உற்சாகம் அடைந்துள்ளது.