மாலத்தீவில் தற்போது அவசரநிலை பிரகடனபடுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த நாட்டில் தற்போது நிலையற்ற தன்மை நிலவுகிறது. இந்நிலையில் இந்திய பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ட்ரம்பும் மாலத்தீவில் நிலவும் அரசியல் நிலைகுறித்தும், ஆப்கானிஸ்தான், மற்றும் தெற்காசிய நாடுகள் குறித்தும் தொலைபேசியில் உரையாடியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.