அவசரநிலைப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மாலத்தீவில் இந்தியர் உள்பட 2 பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டனர். ஏஜென்ஸி பிரான்ஸ் பிரஸ் (AFP) செய்தி நிறுவனத்துக்காகப் பணியாற்றிவரும் இந்தியர் மற்றும் பிரிட்டனைச் சேர்ந்தவர் என 2 பேர் குடியேற்ற விதிகளை மீறியதாகக் கைது செய்யப்பட்டுள்ளதாக மாலத்தீவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.