ஐ.சி.சியின் தன்னாட்சி பெற்ற இயக்குனரை தேர்வு செய்வதற்கான வாரியக் கூட்டம் நடைபெற்றது. இதில் பெப்சி நிறுவன சி.இ.ஓ இந்திரா நூயியை இயக்குனராகத் தேர்வு செய்வது என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. அவர் வரும் ஜூன் மாதம் பொறுப்பேற்பார். அவருடைய பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும்.