பிரதமர் மோடி ஜோர்டான் பயணத்தை தொடர்ந்து தற்போது பாலஸ்தீனம் சென்றுள்ளார். பாலஸ்தீனத்தில் வெளிநாட்டினருக்கு தரப்படும் உயரிய விருதான ’கிராண்ட் காலர்’ விருது மோடிக்கு வழங்கப்பட்டது. பின்னர் பேசிய மோடி, ‘பாலஸ்தீனம் இந்திய நாட்டுக்கு மரியாதை செய்துள்ளது. இந்தியர்கள் சார்பாக எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.