தென்னாப்பிரிக்காவுக்கெதிரான 4-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தவான் 109 ரன்களும், கேப்டன் கோலி 75 ரன்களும் எடுத்தனர். தென்னாப்பிரிக்கா தரப்பில் ரபாடா, இங்கிடி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.