தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 289 ரன் எடுத்தது. அடுத்து தென்னாப்பிரிக்கா களமிறங்கியபோது மழையால் ஓவர்கள் குறைக்கப்பட்டன. 28 ஓவர்கள் 202 ரன்கள் எடுக்க வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதை 25.3 ஓவர்களில் எட்டி தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.