ரஷ்யாவில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில், 65 பயணிகள், விமானக் குழுவைச் சேர்ந்த 6 பேர் என 71 பேர் உயிரிழந்தனர். சரதோவ் ஏர்லைன்சுக்கு சொந்தமான ஆன்டோனாவ்-148 ரக விமானம், மாஸ்கோவிலிருந்து குர்க்ஸ் நகருக்குப் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.