இந்திய அணிக்கெதிரான 4 வது ஒருநாள் போட்டியில் தாமதமாகப் பந்துவீசியதற்காகத் தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு சர்வதேசக் கிரிக்கெட் கவுன்சில் அபராதம் விதித்துள்ளது. போட்டி ஊதியத்திலிருந்து கேப்டன் மார்க்ரமுக்கு 20 சதவிகிதமும் மற்ற வீரர்களுக்குத் தலா 10 சதவிகிதமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.