இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் காலா படம் வரும் ஏப்ரல் 27-ல் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் காலா படத்தின் சண்டைக் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் கசிந்து வேகமாகப் பரவி வருகிறது. 25 விநாடிகள் ஓடும் இந்தக் காட்சி எப்படி கசிந்தது என படக்குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.