இலங்கை உள்ளாட்சித் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேயின் புதிய கட்சி அதிக இடங்களைப் பிடித்துள்ளது. அதிபர் சிறிசேனாவின் சிறீலங்கா சுதந்திரக் கட்சி 3-ம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள், 278 பிரதேச சபைகள் உள்ளிட்டவற்றுக்குக் கடந்த 10-ல் தேர்தல் நடந்தது.