மின்வாரிய ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில், ஊழியர்களுக்கு 2015-ம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு நிலுவையில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.